போலி கிரிப்டோ கரன்சி 'ஒன் காயின்' இணை நிறுவனர் கார்ல் செபாஸ்டியன் கிரீன்வுட்டுக்கு 20 ஆண்டுகள் சிறை

September 13, 2023

ஒன் காயின் என்ற பெயரில் போலி கிரிப்டோ கரன்சியை தொடங்கி, 4 பில்லியன் டாலர்கள் அளவில் மோசடி நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஒன் காயின் இணை நிறுவனர் கார்ல் செபாஸ்டியன் கிரீன்வுட்டுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிபதி எட்கார்டோ ராமோஸ் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளார். இது தவிர, 300 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு, ஒன் காயின் […]

ஒன் காயின் என்ற பெயரில் போலி கிரிப்டோ கரன்சியை தொடங்கி, 4 பில்லியன் டாலர்கள் அளவில் மோசடி நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஒன் காயின் இணை நிறுவனர் கார்ல் செபாஸ்டியன் கிரீன்வுட்டுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிபதி எட்கார்டோ ராமோஸ் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளார். இது தவிர, 300 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு, ஒன் காயின் கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக கிரீன்வுட் கைது செய்யப்பட்டார். தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட அவர், நியூயார்க்குக்கு நாடு கடத்தப்பட்டார். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், ஒன் காயின் மோசடியில் 3.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் படி கோரப்பட்டது. இந்த வழக்கில் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu