போலி குறுஞ்செய்தி மின்வாரியம் எச்சரிக்கை

October 31, 2023

பொதுமக்களின் செல்போன் எண்களுக்கு மின்வாரியத்தில் இருந்து அனுப்புவது போல போலியான குறுஞ்செய்தியின் லிங்குகள் அனுப்பப்படுகின்றன. இதனை சென்று பார்த்தால் பணம் பறிக்கும் நோக்கில் மர்ம நபர்கள் இந்த செயல்களை செய்து வருகின்றார்கள். இதனால் பொதுமக்கள் பதட்டமாகி பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகின்றன. இதனால் மின்வாரியத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனும் குறுஞ்செய்தி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மக்கள் குறுஞ்செய்தி […]

பொதுமக்களின் செல்போன் எண்களுக்கு மின்வாரியத்தில் இருந்து அனுப்புவது போல போலியான குறுஞ்செய்தியின் லிங்குகள் அனுப்பப்படுகின்றன. இதனை சென்று பார்த்தால் பணம் பறிக்கும் நோக்கில் மர்ம நபர்கள் இந்த செயல்களை செய்து வருகின்றார்கள். இதனால் பொதுமக்கள் பதட்டமாகி பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகின்றன.
இதனால் மின்வாரியத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனும் குறுஞ்செய்தி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மக்கள் குறுஞ்செய்தி வந்தால் பதட்டமடைய வேண்டாம். மின் கட்டண ரசீதின் தற்போதைய நிலை என்ன என்பதை இணையதளத்தில் சென்று பார்க்க வேண்டும். குறுஞ்செய்தியில் உள்ள எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம். மேலும் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். உடனடியாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1930-யை அழைத்து புகார் அளிக்க வேண்டும். மேலும் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு இந்த தகவல் பகிரவும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu