கடந்த மே 28 ஆம் தேதி எர்த் கேர் என்ற விண்வெளி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விண்வெளி திட்டம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகியவை இணைந்து பூமியை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்வதற்கு எர்த் கேர் திட்டத்தில் பணியாற்றுகின்றன. Earth Cloud Aerosol and Radiation Explorer என்பதே EarthCARE என்ற சொல்லின் விரிவாக்கம் ஆகும். கடந்த மே 28 ஆம் தேதி மாலை 6:20 மணிக்கு கலிபோர்னியாவில் இருந்து ஏவப்பட்ட இந்த கலம், சரியாக 10 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து பிரிந்து சென்றது. விண்கலத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் இ எஸ் ஏ விஞ்ஞானிகள், அதன் அனைத்து உபகரணங்களும் முழுமையான செயல்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கலத்தில் இருந்து அடுத்த சில மாதங்களில் அறிவியல் தரவுகள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பூமியில் உள்ள ஏரோசால், மேகங்கள், வளிமண்டலம் பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.














