ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி 2 கலிலியோ நேவிகேஷன் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. கென்னடி ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள் வழக்கத்தை விட மாறுபட்டு அமைந்ததாக கூறப்படுகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் கலிலியோ GM25 மற்றும் FM27 ஆகிய ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளி மையம் இந்த செயற்கைக்கோள்கள் மிகச் சரியாக சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு, செயல்பாடுகளை தொடங்கியுள்ளதாக உறுதி செய்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஏவும் நடவடிக்கைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இது சார்ந்த வீடியோக்களை ஸ்பேஸ் எக்ஸ் வெளியிடவில்லை. மேலும், ஐரோப்பிய ஒன்றியமும் இது பற்றிய அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.