உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜகவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 80 தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக இடங்களை பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்கும். இதனால் இம்மாநிலத்தின் தேர்தல் முடிவு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு பாஜக இங்கு அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு பாஜக 71 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது இந்த தேர்தலில் பாஜகவிற்கு உத்தர பிரதேசத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மதிய நிலவரப்படி 34 இடங்களில் மட்டுமே பாஜக முன்னிலையில் உள்ளது. இங்கு உள்ள இடங்களில் 75 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. மீதமுள்ள ஐந்து இடங்களில் கூட்டணி கட்சிகள் களத்தில் நின்றன. இதில் பாஜகவிற்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது