நெதா்லாந்தில் வலதுசாரி தலைவா் கீா்த் வில்டா்ஸ் வெற்றி

November 24, 2023

நெதர்லாந்தில் நடைபெற்ற பொது தேர்தலில் தீவிர வலதுசாரி கொள்கை உடைய கட்சி தலைவரான கீர்த் வில்டர்ஸ் தலைமையிலான சுதந்திர கட்சி வெற்றி பெற்றுள்ளது. கடந்த புதன்கிழமை நெதர்லாந்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை 150 இடங்களை கொண்டுள்ளது. இதில் சுதந்திர கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தை பெற்றது. முன்னதாக 17 இடங்களை மட்டுமே வைத்திருந்தது. தற்போது இரண்டு மடங்கு அதிக பலம் பெற்று இருப்பது யாருமே எதிர்பாராத ஒன்றாகும். தற்போது […]

நெதர்லாந்தில் நடைபெற்ற பொது தேர்தலில் தீவிர வலதுசாரி கொள்கை உடைய கட்சி தலைவரான கீர்த் வில்டர்ஸ் தலைமையிலான சுதந்திர கட்சி வெற்றி பெற்றுள்ளது. கடந்த புதன்கிழமை நெதர்லாந்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை 150 இடங்களை கொண்டுள்ளது. இதில் சுதந்திர கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தை பெற்றது. முன்னதாக 17 இடங்களை மட்டுமே வைத்திருந்தது. தற்போது இரண்டு மடங்கு அதிக பலம் பெற்று இருப்பது யாருமே எதிர்பாராத ஒன்றாகும். தற்போது பதவி விலக உள்ள பிரதமர் மார்க் ரூட் உள்ள இடதுசாரி கட்சி வெறும் 20 இடங்கள் மட்டுமே கைப்பற்றியது. இதையடுத்து கீர்த்தின் தலைமையில் அடுத்த அரசு அமைவது உறுதியானது. தீவிர வலதுசாரி கொள்கையுடைய கீர்த் வில்டர்ஸ் இஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர் ஆவார். இதனால் பல்வேறு தரப்பினர் இவர் வெற்றி பெற்றதற்கு கவலை தெரிவித்துள்ளனர். அவருடைய வெற்றியை தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் ஹங்கேரியின் வலதுசாரி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த மற்ற தலைவர்களுக்கு இவருடைய வெற்றி மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. காரணம் இவர் தீவிர ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பாளர் ஆவார். இவர் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் பிரிக்ஸ்ட்டை விட்டு நெதர்லாந்து வெளியேறும் என்று முன்பு கூறியிருந்தார். தற்போது இவர் புதிய அரசை அமைக்க ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu