ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயம்

October 30, 2023

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டுவெளியூர்களுக்கு அதிக அளவில் மக்கள் பயணம் மேற்கொள்வார்கள். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 5 சதவீதம் குறைப்பதாக ஆம்னி பேருந்து சங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆம்னி பேருந்துகள் செயல்பாடுகள் குறித்த கூட்டத்தில் போக்குவரத்து துறையின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி சென்னை - கோவையில் குறைந்தபட்ச கட்டணம் 1,725 […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டுவெளியூர்களுக்கு அதிக அளவில் மக்கள் பயணம் மேற்கொள்வார்கள். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 5 சதவீதம் குறைப்பதாக ஆம்னி பேருந்து சங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆம்னி பேருந்துகள் செயல்பாடுகள் குறித்த கூட்டத்தில் போக்குவரத்து துறையின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி சென்னை - கோவையில் குறைந்தபட்ச கட்டணம் 1,725 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் ரூபாய் 2,874 ஆகவும், சென்னை - நெல்லையில் குறைந்தபட்ச கட்டணம் 1,960 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூபாய் 3,268 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை போல் சென்னை - சேலத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 1,363 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூபாய் 1,795 ஆகவும், சென்னை - மதுரைக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 1,688 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூபாய் 2,,254 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை - நாகர்கோவில் குறைந்தபட்ச கட்டணம் 2,211 ஆகவும், அதிகபட்ச கட்டணமாக 3,765 ஆகவும், சென்னை திருச்சி குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 1,125 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூபாய் 1,841 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் பேருந்து கட்டணம் குறைந்துள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு 25% கட்டணம் குறைக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu