எரிபொருள், பராமரிப்பு செலவுகள் அதிகரித்ததால், ரெயில்வே துறை சரக்கு ரெயில்கள் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தவுள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களில் இருந்து சரக்குகள் ஏற்ற இறக்கும் நேரத்தில் ரெயில்களுக்கு பாதை மாற்றம் செய்யும் சேவைக்கு விதிக்கப்பட்ட கட்டணம், அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 11% முதல் 12% வரை உயர்த்தப்படும் என ரெயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து இப்போது மீண்டும் மாற்றம் செய்யப்படுகிறது. என்ஜின் பயன்பாடு, எரிபொருள், உதிரிப்பாகங்கள் போன்ற செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றாலும், சில பொருட்களின் விலையைக் கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.