விவசாய கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி வாக்குறுதி

September 6, 2022

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத்தில் தற்போது முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதையடுத்து, பா.ஜ.க , ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தி வாக்குறுதிகளை அளிக்க துவங்கியுள்ளன. ஆமதாபாதில் நேற்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பேசுகையில், குஜராத்தில் காங்கிரஸ் […]

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் தற்போது முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதையடுத்து, பா.ஜ.க , ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தி வாக்குறுதிகளை அளிக்க துவங்கியுள்ளன.

ஆமதாபாதில் நேற்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பேசுகையில், குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். தற்போது 1,000 ரூபாய்க்கு விற்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.

பொது மக்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். மாநிலத்தில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 3,000 ஆங்கில வழி பள்ளிகள் கட்டப்படும். பெண்களுக்கு இலவச கல்வி தரப்படும். பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் மானியம் வழங்கப்படும் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அவர் அளித்தார்.

 

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu