அமெரிக்காவில் பறவை காய்ச்சல் - 42 லட்சம் கோழிகளை கொல்ல உத்தரவு

May 30, 2024

அமெரிக்காவில் பறவை காய்ச்சல் காரணமா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 42 லட்சம் கோழிகளை கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெஸ் மோனைஸில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் பறவை காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 42 லட்சம் கோழிகளைக் கொள்ள அமெரிக்க விவசாயத்துறை உத்தரவிட்டுள்ளது. சியோக்ஸ் கவுண்டில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதையடுத்து இந்த கோழிகளை கொல்லும் பணியில் பண்ணை ஊழியர் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் கோழி பண்ணையில் புது வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால் 14 […]

அமெரிக்காவில் பறவை காய்ச்சல் காரணமா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 42 லட்சம் கோழிகளை கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெஸ் மோனைஸில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் பறவை காய்ச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 42 லட்சம் கோழிகளைக் கொள்ள அமெரிக்க விவசாயத்துறை உத்தரவிட்டுள்ளது. சியோக்ஸ் கவுண்டில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதையடுத்து இந்த கோழிகளை கொல்லும் பணியில் பண்ணை ஊழியர் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் கோழி பண்ணையில் புது வைரஸ் கண்டறியப்பட்டது. இதனால் 14 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டன. கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 9 கோடியே 20 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன.

இந்த நோய் தொற்று கறவை மாடுகளையும் தாக்குகிறது. இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், பறவை காய்ச்சல் கால்நடைகளுக்கும் பரவி வருவதால் கவலை அதிகரித்துள்ளது. பால் பண்ணை தொழிலாளி ஒருவருக்கு பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. அதோடு மாட்டிறைச்சி மற்றும் பால் இரண்டிலும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 9 மாநிலங்களில் உள்ள பால் பண்ணைகளில் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மக்களுக்கு பரவும் ஆபத்து குறைவாகவே இருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu