டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் தொடங்கியுள்ளது

December 19, 2022

டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். 560 மாவட்டங்களில் இருந்து 60,000 கிராமப்புற விவசாயிகள் குழுக்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது குறித்து பாரதிய விவசாயிகள் சங்கத்தின் பிரச்சாரத் தலைவர் ராகவேந்திர படேல் கூறுகையில், நாங்கள் அரசுக்கு 4 கோரிக்கைகளை முன்வைக்கிறோம். அவை - குறைந்தபட்ச ஆதார விலையை செலவினங்களின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும். […]

டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். 560 மாவட்டங்களில் இருந்து 60,000 கிராமப்புற விவசாயிகள் குழுக்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது குறித்து பாரதிய விவசாயிகள் சங்கத்தின் பிரச்சாரத் தலைவர் ராகவேந்திர படேல் கூறுகையில், நாங்கள் அரசுக்கு 4 கோரிக்கைகளை முன்வைக்கிறோம். அவை - குறைந்தபட்ச ஆதார விலையை செலவினங்களின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்.

அனைத்து வகையான விவசாய உற்பத்திப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தற்போது மத்திய அரசு ஏழை விவசாயிகளுக்கு அளித்து வரும் ஆண்டுக்கு ரூ.6,000 எனும் தொகையை உயர்த்த வேண்டும். மரபணு மாற்ற பயிர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu