மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு - ஜந்தர் மந்தருக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் வருகை

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். பாஜக எம்பியான அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல், ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீரர்களின் போராட்டத்திற்கு, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதர விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் சங்கமான சம்யுக்தா கிசான் மோர்சா […]

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். பாஜக எம்பியான அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல், ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வீரர்களின் போராட்டத்திற்கு, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதர விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் சங்கமான சம்யுக்தா கிசான் மோர்சா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகைத், வீரர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள், ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்தடைந்துள்ளனர். வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, விவசாயிகளும் தற்போது போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். விவசாயிகள் பலர், காவல் துறையினரின் தடுப்புகளை மீறி போராட்டத்திற்குள் நுழைந்ததால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. தற்போது, போராட்டம் சுமுகமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu