கடந்த மார்ச் 27ஆம் தேதி, இத்தாலியில், மர்மமான நிகழ்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. ஒரு சில வினாடிகளுக்கு, வானில் சிவப்பு நிற வளையம் தென்பட்டுள்ளது. இந்த மர்மமான நிகழ்வை கண்ட மக்கள், அதனை ஒரு பறக்கும் தட்டாக எண்ணி இருந்தனர். ஆனால், இது ஒரு அரிய வானியல் நிகழ்வு என்று சொல்லப்பட்டுள்ளது. குறுகிய காலமே தென்படும் இந்த நிகழ்வு, இதற்கு முன் 1990 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 360 கிலோ மீட்டர் விட்டத்திற்கு இந்த வளையம் காணப்பட்டுள்ளது. மத்திய இத்தாலி மற்றும் அட்ரியாடிக் கடல் பகுதியில் இது தென்பட்டுள்ளது. பிரபல இயற்கை புகைப்பட கலைஞரான வால்டர் பின்னூட்டோ, இந்த நிகழ்வை புகைப்படம் எடுத்துள்ளார். இது ELVE என்ற அறிவியல் நிகழ்வாக சொல்லப்பட்டுள்ளது. வானில் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடி முழக்கங்கள் ஏற்படும் பொழுது, மின்னணு கதிர்கள் வெளியேறுகின்றன. அப்போது, பூமியின் அயனி மண்டலத்தில் உள்ள பொருட்கள் மின் காந்த அலைகளால் எரியூட்டப்பட்டு, இவ்வாறு நேர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, பூமியின் தரைப்பகுதியில் இருந்து 80 முதல் 644 கிலோமீட்டர் உயரத்தில் இது காணப்படும் என சொல்லப்பட்டுள்ளது.














