தினசரி ஃபாஸ்டேக் சுங்க கட்டண வசூல் 193 கோடி - புதிய உச்சம்

இந்தியாவில், ஃபாஸ்டேக் மூலம் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி, ஃபாஸ்டேக் மூலமான தினசரி சுங்க கட்டண வசூல் 193.15 கோடியாக பதிவாகியுள்ளது. அன்றைய நாளில், 1.16 கோடி என்ற எண்ணிக்கையில் ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம், ஃபாஸ்டேக் கட்டண முறை, சீரான வளர்ச்சிப் பாதையில் வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில், ஃபாஸ்டேக் கட்டாயப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள ஃபாஸ்டேக் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை […]

இந்தியாவில், ஃபாஸ்டேக் மூலம் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி, ஃபாஸ்டேக் மூலமான தினசரி சுங்க கட்டண வசூல் 193.15 கோடியாக பதிவாகியுள்ளது. அன்றைய நாளில், 1.16 கோடி என்ற எண்ணிக்கையில் ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம், ஃபாஸ்டேக் கட்டண முறை, சீரான வளர்ச்சிப் பாதையில் வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில், ஃபாஸ்டேக் கட்டாயப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள ஃபாஸ்டேக் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 1228 ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போதைய நிலையில், 6.9 கோடிக்கும் அதிகமானவர்கள் ஃபாஸ்டேக் பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் 97% பேருக்கு ஃபாஸ்டேக் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை ஃபாஸ்டேக் முறை கணிசமாக குறைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu