பாலஸ்தீன அரசு அமைப்பது குறித்து ஹமாஸ் ரஷ்யாவில் பேச்சுவார்த்தை

February 29, 2024

காசா போர் முடிவுக்கு பின் பாலஸ்தீன பகுதியில் தேசிய ஒற்றுமை அரசை அமைப்பது தொடர்பாக ஹமாஸ் மற்றும் பட்டா அமைப்பின் பிரதிநிதிகள் ரஷ்யாவில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். காசா போர் முடிந்த பின்பு பாலஸ்தீன பகுதியில் தேசிய ஒற்றுமை அரசை அமைக்க வேண்டும் என்று ஹமாஸ் மற்றும் பட்டா அமைப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது குறித்து ரஷ்ய செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது, பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி செய்து வரும் […]

காசா போர் முடிவுக்கு பின் பாலஸ்தீன பகுதியில் தேசிய ஒற்றுமை அரசை அமைப்பது தொடர்பாக ஹமாஸ் மற்றும் பட்டா அமைப்பின் பிரதிநிதிகள் ரஷ்யாவில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

காசா போர் முடிந்த பின்பு பாலஸ்தீன பகுதியில் தேசிய ஒற்றுமை அரசை அமைக்க வேண்டும் என்று ஹமாஸ் மற்றும் பட்டா அமைப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது குறித்து ரஷ்ய செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது, பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பு மேற்கு கரையின் ஒரு பகுதியை ஆண்டு வரும் பட்டா அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

அதில் போருக்கு பிறகு தேசிய ஒற்றுமை அரசை அமைப்பது, காசாவை மறுசீரமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் மிகைல் போக்நுவ் கூறியுள்ளார். முன்னதாக பாலஸ்தீன பிரதமர் முகமது அரசை கலைத்து ராஜினாமா செய்துள்ளார். காசா போர் முடிந்த பின்பு பாலஸ்தீன பகுதிகளில் புதிய ஆட்சி அமைக்க ஏதுவாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். போருக்குப் பின் காசாவில் அதிபர் முஹம்மத் அப்பாஸ் தலைமையிலான பட்டா அமைப்பு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu