ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், அந்நிய நேரடி முதலீடுகள் 15% சரிவு

February 23, 2023

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான முதல் மூன்று காலாண்டுகளில், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு 15% குறைந்து, 36.75 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. இந்தியாவின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு 43.7 பில்லியன் டாலர்களாக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 2022 ஆம் ஆண்டில், முதல் 9 மாதங்களில், பங்கு வரவு, […]

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான முதல் மூன்று காலாண்டுகளில், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு 15% குறைந்து, 36.75 பில்லியன் டாலர்களாக பதிவாகியுள்ளது. இந்தியாவின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை இந்த தகவல்களைத் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு 43.7 பில்லியன் டாலர்களாக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 2022 ஆம் ஆண்டில், முதல் 9 மாதங்களில், பங்கு வரவு, மறு முதலீட்டு வருவாய் மற்றும் இதர மூலதனம் ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்த அந்நிய நேரடி முதலீடு 55.27 அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டில் 60.4 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu