பெடரல் வங்கியின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 4% அளவுக்கு உயர்வடைந்து ஒரு வருட உச்சத்தை இன்று பதிவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தக நாளில் பெடரல் வங்கியின் பங்கு மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் 183 ரூபாய் அளவில் இருந்தது. இது ஒரு வருட உச்சம் ஆகும். நடப்பு நிதி ஆண்டில் சிறந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்ட காரணத்தால், பெடரல் வங்கியின் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், பெடரல் வங்கியின் மொத்த வளர்ச்சி 20% அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெடரல் வங்கியின் மதிப்பு 224139 கோடியாக உள்ளது. மேலும், வங்கியில் உள்ள மொத்த வைப்புத் தொகை 266082 கோடியாக உள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக, பங்கு மதிப்பு இன்று 4% உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஒரு மாதத்தில் பெடரல் வங்கி பங்கு மதிப்பு 10% உயர்ந்து உள்ளதாகவும், கடந்த ஒரு வருடத்தில் 16% உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.