சர்வதேச மாணவர் விசாக்களுக்கு 2 வருட வரம்பு அறிவித்தது கனடா

January 24, 2024

சர்வதேச மாணவர் விசாக்களுக்கு இரண்டு வருட வரம்பு விதித்துள்ளது கனடா அரசு. கனடாவுக்கு கல்வி பயல வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா காலம் இரண்டு ஆண்டுகள் என கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறியிருப்பதாவது, கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு 5.60 லட்சம் மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு […]

சர்வதேச மாணவர் விசாக்களுக்கு இரண்டு வருட வரம்பு விதித்துள்ளது கனடா அரசு.

கனடாவுக்கு கல்வி பயல வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா காலம் இரண்டு ஆண்டுகள் என கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் கூறியிருப்பதாவது, கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு 5.60 லட்சம் மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35 சதவீதம் அளவுக்கு மாணவர் விசாக்களை குறைக்க முடிவு எடுத்துள்ளோம். இதனால் இந்த ஆண்டு 3.64 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகள் வரை அந்த விசாக்கள் செல்லுபடியாகும். அதோடு கனடாவுக்கு வரும் மாணவர்கள் தங்குவதற்கு வீடு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதன் காரணமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதோடு சில கல்வி நிறுவனங்களில் சேர்ந்த உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று போலியான விளம்பரங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu