சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் புறநகரில் உள்ள முக்கியமான இரண்டு சுங்கச்சாவடிகளின் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் இது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒருவழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றின் கட்டணம் ரூபாய் 5 முதல் 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் 60 முதல் 90 வரை உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தமிழகத்தில் ஐந்து சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.