இந்தியா, இலங்கை இடையே படகு சேவை ஏப்ரல் 29ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து இலங்கை விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள கங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து, புதுச்சேரியின் காரைக்கால் வரையிலான பயணியர் படகு சேவை ஏப்., 29ல் துவங்க உள்ளது. பயணியர் ஒவ்வொருவரும் 100 கிலோ எடையிலான உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். இலங்கையில் இருந்து 4 மணி நேர பயணத்தில் காரைக்கால் சென்றடையலாம். இந்தியா - இலங்கையை சேர்ந்த விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு இந்த பயணியர் படகு சேவையை இயக்க வாய்ப்பு அளிக்க தயாராக உள்ளோம் என்று அவர் கூறினார்.