டைட்டன் வர்த்தகம் 12% உயர்வு

January 7, 2023

பிரபல வாட்ச் நிறுவனமான டைட்டன், 12% வர்த்தக வளர்ச்சியை கடந்த காலாண்டில் பதிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக வரவேற்பு காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரட்டை இலக்க வளர்ச்சி பதிவாகி உள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள காலாண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தை சேர்ந்த டைட்டன் நிறுவனம், கடந்த காலாண்டில், புதிதாக 116 விற்பனையகங்களை திறந்துள்ளது. மேலும், அணிகலன் வடிவிலான டைட்டன் தயாரிப்புகள் கடந்த காலாண்டு வருவாயில் மூன்றில் இரண்டு பங்கை ஆக்கிரமித்து, வருடாந்திர […]

பிரபல வாட்ச் நிறுவனமான டைட்டன், 12% வர்த்தக வளர்ச்சியை கடந்த காலாண்டில் பதிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக வரவேற்பு காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரட்டை இலக்க வளர்ச்சி பதிவாகி உள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள காலாண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா குழுமத்தை சேர்ந்த டைட்டன் நிறுவனம், கடந்த காலாண்டில், புதிதாக 116 விற்பனையகங்களை திறந்துள்ளது. மேலும், அணிகலன் வடிவிலான டைட்டன் தயாரிப்புகள் கடந்த காலாண்டு வருவாயில் மூன்றில் இரண்டு பங்கை ஆக்கிரமித்து, வருடாந்திர அடிப்படையில் 11% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும், டைட்டன் வர்த்தக பிரிவின் ஆடை விற்பனையகமான தநேரா 150% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டைட்டனின் கண்ணாடிகள் வர்த்தக பிரிவான டைட்டன் ஐ ப்ளஸ் நிறுவனம் 36 புதிய விற்பனையகங்களை கடந்த காலாண்டில் திறந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu