கர்நாடகா நிலச்சரிவில் உயிரிழந்த தமிழக ஓட்டுநர்களுக்கு நிதி அறிவிப்பு

கனமழை காரணமாக கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த தமிழக ஓட்டுநர்களுக்கு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், வட கன்னட மாவட்டம், அங்கோலா வட்டம், சிரூரோ பகுதியில் கனமழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் கடந்த 16.7.2024 அன்று எல்.பி.ஜி டேங்கர் லாரியில் ஓட்டுநர்களாக சென்ற நாமக்கல் மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னண்ணன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம். வெள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் இவ்விபத்தில் […]

கனமழை காரணமாக கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த தமிழக ஓட்டுநர்களுக்கு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், வட கன்னட மாவட்டம், அங்கோலா வட்டம், சிரூரோ பகுதியில் கனமழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் கடந்த 16.7.2024 அன்று எல்.பி.ஜி டேங்கர் லாரியில் ஓட்டுநர்களாக சென்ற நாமக்கல் மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னண்ணன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம். வெள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர்களின் குடும்பத்திற்கும், அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு தமிழக முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu