மணிப்பூரில் நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த மாதம் 3ம் தேதி மெய்டீஸ், நாகா-குக்கிஸ் சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. இதில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து வன்முறை பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மணிப்பூரில் 50,000க்கும் மேற்பட்டோர் 300க்கும் அதிகமான நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இம்பாலில் உள்ள குமான் லம்பாக் விளையாட்டு வளாகத்துக்கு வருகை தந்த அம்மாநில முதல்வர் பிரேன் சிங் நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.