சிக்கிம் அரசு வேலைக்கு செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 நிதி வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிக்கிம் அரசு வேலைக்கு செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 நிதி வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக 32,000 குடும்பத் தலைவிகளுக்கு ரூ.20,000 வழங்கி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவி பெற, பெண்கள் வேலைக்கு செல்லாதவராக இருக்க வேண்டும் மற்றும் குழந்தை பெற்றிருப்பதும் அவசியமாகும். முதல்வர் பிரேம் சிங் தமங் இன்று திட்டத்தை தொடங்கி, பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இது முக்கியமான படி என விளக்கினார்.