கைவினை கலைஞர்களுக்கு புதிய திட்டம்

September 11, 2023

கைவினை கலைஞர்களுக்கு பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17ஆம் தேதி முதல் தொடக்கம். கைவினை கலைஞர்களுக்கு பி. எம். விஸ்வகர்மா என்ற பெயரில் நிதி உதவி செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்காக ரூபாய் 13,000 கோடி ஒதுக்கீடு செய்து கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் கைவினை தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளன. மேலும் […]

கைவினை கலைஞர்களுக்கு பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17ஆம் தேதி முதல் தொடக்கம்.

கைவினை கலைஞர்களுக்கு பி. எம். விஸ்வகர்மா என்ற பெயரில் நிதி உதவி செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்காக ரூபாய் 13,000 கோடி ஒதுக்கீடு செய்து கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் கைவினை தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளன. மேலும் இதில் ஒரு லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இரண்டாம் தவணையாக 2 லட்சம் வரை 5% வட்டியுடன் கடன் வழங்கப்படும். இந்தியா முழுவதும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனை 17ஆம் தேதி விஸ்வகர்மா தினத்தில் தொடங்கி வைக்கிறார். அதே நாளில் நாடு முழுவதும் 70 இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறும். இதில் மத்திய மந்திரிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இது கைவினை கலைஞர்களின் தயாரிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவும், உலகளாவிய மதிப்பம்சங்களுடன் ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu