ஏழை சிறைக்கைதிகளுக்கு நிதியுதவி - மத்திய அரசு புதிய திட்டம்

அபராதம், ஜாமீன் தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் தவிக்கும் ஏழை கைதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்குகிறது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சிறைகளில் விசாரணை கைதிகளின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஏழை கைதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஏழை கைதிகளில் பெரும்பாலானோர், சமூகரீதியாக பின்தங்கியவர்கள். குறைவான படிப்பும், வருமானமும் கொண்டவர்கள். அவர்கள் அபராதமோ, ஜாமீன் […]

அபராதம், ஜாமீன் தொகை செலுத்த முடியாமல் சிறைகளில் தவிக்கும் ஏழை கைதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்குகிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சிறைகளில் விசாரணை கைதிகளின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஏழை கைதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஏழை கைதிகளில் பெரும்பாலானோர், சமூகரீதியாக பின்தங்கியவர்கள். குறைவான படிப்பும், வருமானமும் கொண்டவர்கள். அவர்கள் அபராதமோ, ஜாமீன் தொகையோ செலுத்த முடியாமல் சிறையில் வாடி வருகிறார்கள்.

அத்தகைய ஏழை கைதிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும். அதன்மூலம் அவர்கள் சிறையில் இருந்து வெளிவர முடியும். சிறையிலும் நெரிசல் குறையும். தகுதியான ஏழை கைதிகளுக்கு பலன்கள் சென்றடைவதற்காக தொழில்நுட்ப வழிமுறைகள் பயன்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu