தமிழகத்தில் உள்ள 2000 கோயில்களுக்கு மாதம் தோறும் மானியமாக 2000 ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் நிதி வசதி குறைவாக உள்ளது. இதனால் ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத கோயில்களுக்கு ஒரு கால பூஜை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு கோயிலின் பெயரிலும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்யப்பட்டு கிடைக்கும் பணம் மூலம் பூஜை செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தற்போது விலை வாசி உயர்வின் காரணமாக பூஜை செலவினத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனை ஈடுகட்ட 10959 கோயில்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 130 கோடி நிலை நிதி ஏற்படுத்தப்படும் என 2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு லட்சம் ரூபாய் என இருந்ததை ரூபாய் 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசு மானிய காசோலையினை தமிழ்நாடு மின்வுசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது. மேலும் 2022-2023 ஆம் ஆண்டில் கூடுதலாக 2000 கோயில்களுக்கு இத்திட்டதை விரிவு அரசு மானியம் 40 கோடி ரூபாயாக காசோலை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.