ஊரக உள்ளாட்சிகளுக்கான நிதி அதிகாரம் ரூ.50 லட்சம் வரை உயர்வு

December 16, 2022

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிதி அதிகாரம் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கிராம ஊராட்சிகளுக்கு ரூ.5 லட்சம் வரையும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.25 லட்சம் வரையும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சம் வரையும் தாமாகவே உரிய தீர்மானம் நிறைவேற்றி பணிகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப் பரவலாக்கத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக ஊரக உள்ளாட்சியில் […]

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிதி அதிகாரம் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கிராம ஊராட்சிகளுக்கு ரூ.5 லட்சம் வரையும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.25 லட்சம் வரையும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.50 லட்சம் வரையும் தாமாகவே உரிய தீர்மானம் நிறைவேற்றி பணிகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரப் பரவலாக்கத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஊரக உள்ளாட்சியில் 3 அடுக்கு ஊராட்சி முறை நடைமுறையில் உள்ளது. ஊரகப் பகுதிகளை உள்ளடக்கிய 37 மாவட்டங்களில் 79,395 குக்கிராமங்கள் அடங்கிய 12,525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இடைநிலை அளவில் 388 ஊராட்சி ஒன்றியங்கள் அதாவது வட்டார ஊராட்சிகள் உள்ளன. 36 மாவட்ட ஊராட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu