காற்று மாசு அளவீட்டில் டெல்லியை மும்பை மிஞ்சியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மும்பையின் பல பகுதிகளில் காற்று தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை நகரத்தின் காற்று தர அளவீடு, 113 ஆக சொல்லப்பட்டுள்ளது. இது காற்று தர நிர்ணயத்தின் படி, ‘மாடரேட்’ ரகத்தை சேர்ந்ததாகும். ஆனால், அதே சமயத்தில், டெல்லி நகரத்தின் காற்று தரம் 83 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இது ‘திருப்திகரமான’ ரகத்தை சேர்ந்ததாகும். அதன்படி, பொதுவாக காற்று தரத்தில் பின்தங்கி இருக்கும் டெல்லியை, மும்பை மிஞ்சியுள்ளது. அத்துடன், சராசரியாக, மாடரேட் அளவில் காற்று தரம் இருந்தாலும், நகரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில், ‘மிகவும் மோசமான’ அளவீட்டில் (300 க்கும் அதிகமாக) காற்று தரம் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்தேரி, நவி மும்பை, மஸ்கான் போன்ற பகுதிகள் மோசமான காற்றுத் தரத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.