எஸ்பிஐ உட்பட 9 மில்லியன் வாடிக்கையாளர்களின் நிதி விவரங்கள் கசிந்துள்ளது

October 13, 2022

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் உட்பட ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான கார்டுதாரர்களின் நிதித் தரவுகள் கசிந்துள்ளதாக சைபர்-பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். சிங்கப்பூரைச் சேர்ந்த CloudSEK இன் ஹேக்கிங் நுண்ணறிவுக் குழுவானது தி௫டப்பட் 1.2 மில்லியன் கார்டுகளின் தரவுதளத்தையும் ரஷ்ய மொழி பேசும் டார்க் வெப் சைபர் கிரைம் ஆனது இலவசமாக விளம்பரம் செய்வதை கண்டறிந்துள்ளது. இந்த தரவு தி௫ட்டானது, BidenCash இணையதளத்தில் 7.9 மில்லியன் கார்டுதாரர்களின் தரவுகள் விளம்பரப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு சம்பவம் ஆகும். […]

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் உட்பட ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான கார்டுதாரர்களின் நிதித் தரவுகள் கசிந்துள்ளதாக சைபர்-பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த CloudSEK இன் ஹேக்கிங் நுண்ணறிவுக் குழுவானது தி௫டப்பட் 1.2 மில்லியன் கார்டுகளின் தரவுதளத்தையும் ரஷ்ய மொழி பேசும் டார்க் வெப் சைபர் கிரைம் ஆனது இலவசமாக விளம்பரம் செய்வதை கண்டறிந்துள்ளது.

இந்த தரவு தி௫ட்டானது, BidenCash இணையதளத்தில் 7.9 மில்லியன் கார்டுதாரர்களின் தரவுகள் விளம்பரப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு சம்பவம் ஆகும். இந்த ஹேக்கர்கள் SSN, அட்டை விவரங்கள் மற்றும் CVV போன்ற முக்கியமான தனிப்பட்ட அடையாளத் தகவல் (PII) போன்றவற்றை வெளியிட்டதாக நுண்ணறிவுக்குழு ௯றியது. மேலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஃபிசர்வ் சொல்யூஷன்ஸ் எல்எல்சி, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகியவை இதனால் பாதிக்கப்பட்டுள்ள சில வங்கி நிறுவனங்கள் ஆகும். அதேபோல மாஸ்டர்கார்டுக்கு அடுத்தபடியான விசா கார்டு கட்டண நெட்வொர்க்கின் 414,000 பதிவுகள் உட்பட சுமார் 508,000 டெபிட் கார்டுகளின் தகவல்கள் தி௫டப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கசிந்த தரவுகள் ஆனது சமூகப் பொறியியல் திட்டங்கள், ஃபிஷிங் தாக்குதல்கள் மற்றும் அடையாளத் திருட்டு போன்றவற்றைத் திட்டமிடுவதற்கு ஹேக்கர்களுக்கு உதவும். அதேசமயம் கார்டு கடத்தல், கார்டு குளோனிங், மற்றும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட ஹேக்கர்ஸ் இந்த அட்டைகளின் விவரத்தைப் பயன்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu