ரஷ்யாவுடனான எல்லையை பின்லாந்து மூடவுள்ளது

November 30, 2023

புலம்பெயர்ந்தோர் பிரச்சினையால் ரஷ்யாவுடனான எல்லையை முழுமையாக மூட போவதாக பின்லாந்து அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பின்லாந்து ரஷ்யாவுடன் 1340 கிலோமீட்டர் தூர எல்லையை பகிர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த எல்லை வழியாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பின்லாந்துக்குள் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அந்நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் முறையான விசா இன்றி ஆயிரத்திற்கும் அதிகமானோர் பின்லாந்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் ரஷ்யா வழியாக பின்லாந்து அடைந்ததாக […]

புலம்பெயர்ந்தோர் பிரச்சினையால் ரஷ்யாவுடனான எல்லையை முழுமையாக மூட போவதாக பின்லாந்து அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பின்லாந்து ரஷ்யாவுடன் 1340 கிலோமீட்டர் தூர எல்லையை பகிர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த எல்லை வழியாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பின்லாந்துக்குள் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அந்நாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் முதல் முறையான விசா இன்றி ஆயிரத்திற்கும் அதிகமானோர் பின்லாந்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் ரஷ்யா வழியாக பின்லாந்து அடைந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் இந்த நாட்டிற்குள் நுழைய காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாக ரஷ்யாவுடனான எல்லையை முழுமையாக மூடப் போவதாக பின்லாந்து அறிவித்துள்ளது. குறைந்தது இரண்டு வாரத்திற்கு ரஷ்ய எல்லை முழுமையாக மூடப்படும் என்றும் அதன் பின்பு ஒரு சில எல்லை சாவடிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது என்று பின்லாந்து கூறியுள்ளது. முன்னதாக 8 சோதனை சாவடிகள் பின்லாந்து அரசால் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu