மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் வாகனம் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தானது, அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 10 பேரில் 9 பேர் இந்தியர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாலேயில் உள்ள அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸ் ஈடுபட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பணி நிமித்தமாக இங்கு வந்து தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் ஆவர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் எனவும், மற்றவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு இந்தியத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.