மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோர் மையத்தில் தீ விபத்து- 39 பேர் பலி

March 29, 2023

மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோர் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் பலியாகினர். மெக்சிகோவின் வடக்கு பகுதியில், அமெரிக்க எல்லையை ஒட்டி சியூதத் ஜூவாரஸ் என்ற இடத்தில் புலம்பெயர்ந்தோருக்கான மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் 39 பேர் பலியாகினர். 29 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த மையத்தில் தங்கியிருந்த […]

மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோர் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் பலியாகினர்.

மெக்சிகோவின் வடக்கு பகுதியில், அமெரிக்க எல்லையை ஒட்டி சியூதத் ஜூவாரஸ் என்ற இடத்தில் புலம்பெயர்ந்தோருக்கான மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் 39 பேர் பலியாகினர். 29 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த மையத்தில் தங்கியிருந்த நபர்கள், அதிகாரிகள் மீது கோபத்தில் இருந்ததாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் கூறியிருக்கிறார். அதிகாரிகளுக்கு எதிரான போராட்டத்தின்போது தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu