வாசிட் மாகாணத்தில் நடந்த துயரச் சம்பவம்; நள்ளிரவில் ஏற்பட்ட தீயால் பெருந்துயரம்.
ஈராக்கின் குட் நகரில் உள்ள ஐந்து மாடி ஷாப்பிங் மாலில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 45 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தீயில் கருகிய 14 உடல்களின் அடையாளம் தெரியவில்லை. சமீபத்தில் தான் திறக்கப்பட்ட இந்த மாலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து கட்டிட உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் ஈராக்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.