தூத்துக்குடியில் தும்பு குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி வி.இ.ரோட்டில் உள்ள டி.எஸ்.எப். வணிக வளாகத்திற்கு எதிரே கிருஷ்ண சங்கருக்கு சொந்தமான தும்பு குடோனில் நேற்று இரவு திடீரென தீ ஏற்பட்டு புகை கிளம்பியது. அருகிலுள்ள மக்கள் உடனடியாக தகவல் அளித்தனர். மாநகர தீயணைப்பு படையினர் 2 வாகனங்களில் வந்து அலுவலர் கணேசன், உதவி அலுவலர் ஆனந்தி ஆகியோரின் தலைமையில் தீயை கட்டுப்படுத்தினர்.இந்த சம்பவத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தும்புகள் எரிந்து சேதமடைந்தன. தீ விரைவில் அணைக்கப்பட்டதால் அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் பாதுகாக்கப்பட்டன. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














