ஃபயர் ஃபாக்ஸ் தேடு பொறியை உருவாக்கிய மோசில்லா கார்ப்பரேஷன் கிட்டத்தட்ட 60 பேரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது மோசில்லா நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 5% ஆகும்.
மோசில்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக லாரா சேம்பர்ஸ் கடந்த வாரம் பதவி ஏற்றார். இதற்கு முன் அவர் ஏர்பிஎன்பி மற்றும் ஈபே போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். அவர் மோசில்லா நிறுவனத்தில் பொறுப்பேற்ற உடனேயே பணி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














