இந்தியா பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு

October 27, 2023

நேற்று இரவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் திடீரென பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனை எதிர்த்து இந்திய எல்லை பாதுகாப்பு படை பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பாதுகாப்பு படை வீரர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் அரினியா, ஆர் எஸ் புரா […]

நேற்று இரவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் திடீரென பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனை எதிர்த்து இந்திய எல்லை பாதுகாப்பு படை பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பாதுகாப்பு படை வீரர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். இதில் பாகிஸ்தான் வீரர்கள் அரினியா, ஆர் எஸ் புரா செக்டாரில் உள்ள ஐந்து இந்திய எல்லைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற ஐந்து லஸ்கர் இ- தொய்பா பயங்கரவாதிகளை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதனால் இந்தியாவில் ஊடுருவும் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தியதாக எல்லையார மக்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu