ஸ்டார்லைனர் விண்வெளி பயணம் மே 25 க்கு ஒத்திவைப்பு

போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலம், கடந்த மே 7ஆம் தேதி தனது முதல் விண்வெளி பயணத்தை தொடங்க இருந்தது. கடைசி நிமிடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டம் ரத்து செய்யப்பட்டது. பிறகு, மே 10ம் தேதி திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு, மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, மே 25 அன்று செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹீலியம் கசிவு காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில், முதல் […]

போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலம், கடந்த மே 7ஆம் தேதி தனது முதல் விண்வெளி பயணத்தை தொடங்க இருந்தது. கடைசி நிமிடத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டம் ரத்து செய்யப்பட்டது. பிறகு, மே 10ம் தேதி திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு, மே 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, மே 25 அன்று செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹீலியம் கசிவு காரணமாக திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தில், முதல் முறையாக போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் கலம் மனிதர்களை விண்வெளிக்கு சுமந்து செல்ல பயன்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 3 வது முறையாக விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu