இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் இடையே, டாலருக்கு மாற்றாக சொந்த நாணயங்களின் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
முதல்முறையாக, திங்கட்கிழமை இந்த வர்த்தகம் நடைபெற்றது. அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி மற்றும் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே, சுமார் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் பரிவர்த்தனை சொந்த நாணயத்தில் நடைபெற்று உள்ளது. அண்மையில், இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த சொந்த நாணய வர்த்தக அறிவார்த்தனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன், இந்த பரிவர்த்தனை மூலம் இந்தியா மற்றும் அமீரகம் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.