விக்ராந்த் கப்பலில் முதல் போர் விமானம் தரையிறக்கம்

February 7, 2023

விக்ராந்த் கப்பலில் முதல் போர் விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விமானம் தாங்கி போர்க் கப்பல் அண்மையில் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகு ரக போர் விமானமான தேஜஸ் சோதனை அடிப்படையில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. ரூ.20,000 கோடி செலவில் கட்டப்பட்ட 45,000 டன் எடை கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் கடந்த ஆண்டு செப்டம்பரில் நாட்டுக்கு […]

விக்ராந்த் கப்பலில் முதல் போர் விமானம் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

முற்றிலும் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விமானம் தாங்கி போர்க் கப்பல் அண்மையில் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான இலகு ரக போர் விமானமான தேஜஸ் சோதனை அடிப்படையில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

ரூ.20,000 கோடி செலவில் கட்டப்பட்ட 45,000 டன் எடை கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் கடந்த ஆண்டு செப்டம்பரில் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டது. 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்ட விக்ராந்த் இந்தியாவில் கட்டப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலாகும். இதில், 30 விமானங்களை கொண்டு செல்ல முடியும். அத்துடன் இந்த போர்க்கப்பலில் கிட்டத்தட்ட 1,600 பணியாளர்கள் தங்க முடியும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu