உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் அலுமினியம் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் வெற்றி - இந்தியன் ரயில்வே

October 17, 2022

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் அலுமினியம் சரக்கு ரயில், ஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வரில் சோதனை செய்யப்பட்டது. ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா கொடி அசைத்து ரயிலின் முதல் பயணத்தை தொடக்கி வைத்தார். முழுக்க முழுக்க அலுமினியத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த ரயிலை, பெஸ்கோ லிமிடெட் நிறுவனத்தின் வேகன் பிரிவு மற்றும் ஹிண்டால்கோ நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. இந்த ரயிலின் மூலம், கார்பன் உமிழ்வு பெருமளவு கட்டுப்படுத்தப்படுவதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. மேலும், எடை குறைந்த இந்த ரயிலில், அதிக […]

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் அலுமினியம் சரக்கு ரயில், ஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வரில் சோதனை செய்யப்பட்டது. ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா கொடி அசைத்து ரயிலின் முதல் பயணத்தை தொடக்கி வைத்தார். முழுக்க முழுக்க அலுமினியத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த ரயிலை, பெஸ்கோ லிமிடெட் நிறுவனத்தின் வேகன் பிரிவு மற்றும் ஹிண்டால்கோ நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. இந்த ரயிலின் மூலம், கார்பன் உமிழ்வு பெருமளவு கட்டுப்படுத்தப்படுவதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. மேலும், எடை குறைந்த இந்த ரயிலில், அதிக எடை உள்ள சரக்குகளை ஏற்றிச் செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா, “நம் நாட்டிற்கு இது ஒரு பெருமைமிகு தருணம் ஆகும். இந்த ரயில்கள் மூலம், 14500 டன்கள் கார்பன் உமிழ்வு கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், இந்த ரயில்கள், குறைந்த அளவிலான எரிசக்தியில் இயங்குவதோடு, உலோக அரிப்பு இல்லாதவையாகவும் உள்ளன. இந்த ரயில்கள் 100% புதுப்பிக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 30 வருடங்களுக்கு பின்னரும் புதிது போலவே இருக்கும் தன்மை உடையன. இதன் மூலம் நமது நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த இலக்குகள் விரைவில் எட்டப்படும்” என்று கூறினார்.

ஹிண்டால்கோ நிறுவனம், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்திய ரயில்வே, இது போன்ற அலுமினியம் ரயில்களைத் தொடர்ந்து தயாரிக்க உள்ளது. சுமார் 15 முதல் 20% அலுமினிய சரக்கு ரயில்களை இயக்குவதால், வருடாந்திர கார்பன் உமிழ்வு 25 லட்சம் டன்களுக்கும் கீழாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியன் ரயில்வே, சுமார் 1 லட்சம் அலுமினியம் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரயிலின் வடிவமைப்பை பெஸ்கோ நிறுவனம் மேற்கொள்வதாகவும், உற்பத்தியை ஒடிசாவின் ஹிராகுட் பகுதியில் உள்ள ஹிண்டால்கோ உற்பத்தி மையம் மேற்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், “வழக்கமான சரக்கு ரயில்களை விட 120 டன்கள் கூடுதலாக இந்த அலுமினியம் சரக்கு ரயில்களில் ஏற்ற முடியும். மேலும், உயரமான பகுதியில், ரயில்களின் வேகம் பாதிக்காமல், ரயிலை கட்டுப்படுத்த முடியும். அலுமினியத்திற்கு 80 சதவீத ரீசேல் மதிப்பு உள்ளதால், 10 வருடம் அதிக நீண்ட ஆயுள் கிடைக்கிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே வேளையில், உற்பத்தி செலவு 35% கூடுதல் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இரும்பு ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கு அதிக அளவில் நிக்கல் மற்றும் கட்மீயம் ஆகியவை இறக்குமதி செய்யப்பட வேண்டும். அதனால், அலுமினிய ரயில்களை தயாரிப்பதால் நாட்டின் இறக்குமதி குறைந்து, பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்திய ரயில்வேயுடன் இணைந்து ஆத்ம நிர்பார் பாரத் இலக்கை அடைவதில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் பங்கு கொள்கிறது. நிறுவனத்திற்கு இது ஒரு பெருமை ஆகும்” என்று ஹிண்டால்கோ நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சதீஷ் பாய் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu