கர்நாடகாவில் முதல் மந்திரி சித்தராமையா, துணை மந்திரி டி.கே சிவகுமார், மந்திரிகள் ஆகியோர் சட்டசபை வளாகத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் பருவ மழை பொய்த்ததன் காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் அங்குள்ள வறட்சி பாதித்த பகுதிகளுக்கு கர்நாடகா அரசு இழப்பீடாக 18,171 கோடி ரூபாய் வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் மத்திய அரசு ரூபாய் 3454 கோடி வறட்சி பணிக்காக ஒதுக்கீடு செய்தது.கோரிய தொகைக்கு இது மிகவும் குறைந்த தொகையாகும்.இந்நிலையில் வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி இழைத்ததாக கோரி கர்நாடகா முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி டி.கே சிவகுமார், மந்திரிகள் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் கர்நாடகா சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.














