தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்கியிருந்தார். இந்த பாத யாத்திரையின் முதல் கட்டம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
கடந்த ஜூலை 28ஆம் தேதி, ராமேஸ்வரத்திலிருந்து, அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கினார். அதன் முதற்கட்டத்தில், 22 நாட்களில் 40 தொகுதிகள் இடம்பெறுகிறது. இன்று, மற்றொரு தொகுதி பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதனுடன் சேர்த்து, மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 41 ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி, இரண்டாம் கட்ட பாத யாத்திரையை அண்ணாமலை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பாதயாத்திரை, மொத்தம் 6 மாத காலம் நடைபெற்று, ஜனவரி 11ஆம் தேதி நிறைவேறும் என சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பாதயாத்திரை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.