குடியரசு தின விழா அணிவகுப்பில் உத்தராகண்ட் மாநில அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் 26-ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் பல மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இதில் உத்தரா கண்ட் மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த அலங்கார ஊர்தியில் உத்தராகண்ட் மாநிலத்தின் வன விலங்குகள் மற்றும் பறவைகள் இடம் பெற்றிருந்தன. அலங்கார ஊர்தியின் முன் பகுதியில் கார்பட் தேசிய பூங்காவின் கலைமான், கஸ்தூரி மான் இனங்கள், தேசிய பறவை மயில், கோரல் பறவை உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.