உலக வரலாற்றிலேயே வெப்பமான காலகட்டம் 2023-24 ஆம் ஆண்டு என அண்மையில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் மற்றும் காலநிலை மாற்ற கண்காணிப்பு அமைப்பு - கோப்பர்னிக்கஸ் சர்வீஸ் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில், கடந்த 2023 ஜூன் முதல் 2024 ஜூன் வரையிலான காலகட்டம் உலக வரலாற்றில் வெப்பம் நிறைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2024 ஜூன் மாதம் அதி வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளது. முன்னதாக, கடந்த 1850 முதல் 1900 வருடங்களுக்குள் உலகம் மிகுந்த வெப்பமாக இருந்ததாக சொல்லப்பட்டது. அதற்கு பிறகு, கடந்த ஆண்டு அதிக வெப்பமான காலகட்டமாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட எல் நினோ விளைவு வெப்பத்துக்கான முக்கிய காரணியாக அமைந்துள்ளது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மேலும், காலநிலை மாற்றத்தை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.














