40% கூடுதல் விலையில் பட்டியலானது ஃபர்ஸ்ட் க்ரை பங்குகள்

August 13, 2024

ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தின் தாய் நிறுவனமான பிரெயின்பீஸ் சொல்யூஷன்ஸ் பங்குகள் பங்குச்சந்தையில் பிரீமியத்துடன் வர்த்தகத்தை தொடங்கி உள்ளது. பங்கு வெளியிடப்பட்ட விலையான ரூ.549-க்கு எதிராக, தேசிய பங்குச் சந்தையில் ரூ.651-க்கும், மும்பை பங்குச் சந்தையில் ரூ.625-க்கும் பட்டியலானது. இது முறையே 40% மற்றும் 34.4% உயர்வு ஆகும். பங்குச் சந்தைக்கு வருவதற்கு முன்பே, ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.84 பிரீமியத்தில் கிரே மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது. இந்த IPO மூலம் ரூ.1,886 கோடி நிதி […]

ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தின் தாய் நிறுவனமான பிரெயின்பீஸ் சொல்யூஷன்ஸ் பங்குகள் பங்குச்சந்தையில் பிரீமியத்துடன் வர்த்தகத்தை தொடங்கி உள்ளது. பங்கு வெளியிடப்பட்ட விலையான ரூ.549-க்கு எதிராக, தேசிய பங்குச் சந்தையில் ரூ.651-க்கும், மும்பை பங்குச் சந்தையில் ரூ.625-க்கும் பட்டியலானது. இது முறையே 40% மற்றும் 34.4% உயர்வு ஆகும்.

பங்குச் சந்தைக்கு வருவதற்கு முன்பே, ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.84 பிரீமியத்தில் கிரே மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது. இந்த IPO மூலம் ரூ.1,886 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. SBI மியூச்சுவல் ஃபண்ட், HDFC மியூச்சுவல் ஃபண்ட், கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட 71 ஆங்கர் முதலீட்டாளர்கள் இந்த IPO-வில் முதலீடு செய்துள்ளனர். புதிய ‘பேபிஹக்’ கடைகளைத் தொடங்குதல், துணை நிறுவனமான டிஜிட்டல் ஏஜில் முதலீடு செய்தல், வெளிநாட்டு விரிவாக்கம் மற்றும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu