மேற்கு கரையின் துல்கர்ம் மாகாணத்தில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா முனையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 251 பேரை காசா கடத்திச் சென்றனர். இதற்குப் பிறகு, இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் அறிவித்தது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட பணய கைதிகளை மீட்டுள்ளது. காசாவில் 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 93,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் மேற்கு கரையின் துல்கர்ம் மாகாணத்தில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவரின் உடல்கள் துல்கர்ம் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த அக்டோபரில் 632 பேர் உயிரிழந்தனர்.