ஜம்மு காஷ்மீரில் ஜமாத் - இ - இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பை கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது.
காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத் - இ - இஸ்லாமி என்ற அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த அமைப்புடன் தொடர்புடைய இடங்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. மேலும் இதில் தீவிரவாதம் தொடர்புடைய ஆவணங்கள் டிஜிட்டல் கருவிகள் மற்றும் 20 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இதற்கு முன்னதாக ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் மீது அரசு தடை விதித்திருந்தது. தற்போது இந்த அமைப்பின் மீதான தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.