கன மழையின் காரணமாக சிக்கிம் மாநிலத்தில் சுங் தாங் அணையில் நீர் வரத்து அதிகமானது.வடக்கு சிக்கிம் லாச்சென் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று காலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் சிறிது நேரத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகமானதால் சுங் தாங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த வெள்ளமானது ஊருக்குள் பெருக்கெடுக்க ஆரம்பித்த நிலையில் அங்குள்ள ராணுவ முகாமுக்குள் திடீரென்று வெள்ளம் புகுந்ததது. இதில் ராணுவ வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அங்கு முகாமில் இருந்த வீரர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். 23 ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக ராணுவ மையம் உறுதிப்படுத்தி உள்ளது. வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.














