வட இந்தியாவில் நிலவி வரும் பனி மூட்டம் காரணமாக டெல்லியில் 110 விமான சேவை, 25 ரயில் சேவைகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
வட இந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. மேலும் எங்கு காணினும் கடுமையான பனிமூட்டமாக காட்சி தருகிறது. இதனால் எதிரேவரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு தரைகளில் பனி படர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லி மட்டுமில்லாமல் உ.பி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்பட்டு வருகிறது . மேலும் பனிமூட்டம் காரணமாக இந்திய வானிலை மையம் டெல்லிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. இதனால் டெல்லியில் 25-க்கும் மேற்பட்ட ரயில்கள் காலதாமதமாக வந்து கொண்டிருக்கின்றன. இது தவிர 110 விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.














